
இன்றைய உலகத்தில் டிஜிட்டல் முறையில் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த யுபிஐ செயலியின் மூலம் நொடிப் பொழுதில் ஒருவர் இன்னொருவருக்கு பணத்தை அனுப்பி கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் முடியும்.
இந்நிலையில் சிலர் பணத்தை அறியாமல் தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பி விடுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. அவ்வாறு யுபிஐ பயனாளர்கள் தவறாக பணம் செலுத்தினால் அதனை எவ்வாறு திரும்ப பெறலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி சிறந்த வழிகாட்டுதல் விதிமுறைகளை அளித்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் தொழிலாளர்கள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அனைவரும் யுபிஐ செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த யுபிஐ செயலியால் உலகின் மூலை முடுக்குகளில் உள்ள மனிதர்களும் பயனைடைந்து வருகிறார்கள். இதைத் தொடர்ந்து கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற பல்வேறு செயலிகள் மூலம் இந்தியாவில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதால் பணப்புழக்கம் என்பது மிகவும் குறைந்து காணப்படுகிறது.
இதனால் காய்கறி கடையில் தொடங்கி ஜவுளிக்கடை, மளிகை கடை ஆட்டோ, சந்தை போன்ற பல இடங்களில் இதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இதன் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவும் காணப்படுகிறது. தற்போது இந்த செயலியில் சில பயனாளர்கள் தவறுதலாக பணம் செலுத்தி விடுகின்றனர். அவ்வாறு அனுப்பினால் அதனைப் பெற்றவரை தொடர்பு கொண்டு தவறாக அனுப்பிவிட்டேன் என்ற விவரத்தை சொல்லலாம்.
மேலும் பணத்தை திரும்பப் பெறுவதில் அவரிடம் ஒத்துழைப்பை கேட்கலாம். அத்துடன் யுபிஐ செயலியின் கஸ்டமர் சப்போர்ட்டிங் ஐ தொடர்பு கொண்டு விவரத்தை கூறி ரீஃபண்ட் செய்வதற்கான தகவல்களை பயனர்கள் தர வேண்டும். அப்படியும் கிடைக்காத பட்சத்தில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அடுத்ததாக தவறாக பணம் அனுப்பப்பட்ட ன QR கோடினை ஸ்கேன் செய்து யுபிஐ செயலியின் கஸ்டமர் சப்போர்ட் அனுகி புகார் அளிக்கும் வசதியும் உள்ளது.
அத்துடன் அவர்கள் சொல்லும் வழிகாட்டுதலை பின்பற்றி ரீஃபண்ட் பெறலாம். மேலும் தனக்கு வங்கி கணக்கு உள்ள வங்கியை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். தவறான யுபியை பரிவர்த்தனை குறித்து 1800-120-1740 என்கிற டோல் ஃப்ரீ நம்பருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.