
தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 7-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் கலந்துக்கொள்ள இருக்கிறார். அவரை வரவேற்கும் விதமாக சாந்த பிள்ளை கேட் பகுதியில், திமுக கட்சியின் கொடி ஊன்றும் வேலை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இதில் பணியாற்றிக் கொண்டிருந்த கீழவாசல் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள இரும்புக் குழாயில் கொடியை ஊன்ற முயற்சித்தார். அப்போது அவர் திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.