சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து மாநகரப் பேருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 80 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரம் எச்.வி.எப் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்காக டிராக்டர் வந்து கொண்டிருந்தது.

இந்த டிராக்டரை முனுசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அதில் 4 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி சேதம் அடைந்தது. மேலும் முனுசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.