
2023 ஆம் ஆண்டு முடிவடைந்து இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதில் சில படங்கள் ஆஸ்கர் வரை செல்ல தகுதியான திரைப்படங்களாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அதன்படி 2024 ஆம் ஆண்டு வெளியாக உள்ள திரைப்படங்கள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியன் 2:
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. சித்தார்த், ராகுல் ப்ரீத், ப்ரியா பவானி சங்கர், எஸ்ஜே சூர்யா, மறைந்த நடிகர் விவேக், மனோபாலா மற்றும் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார்.
தங்கலான்:
பா ரஞ்சித் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோது உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
அயலான்:
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் கருணாகரன், ரகுல் ப்ரீத் நடித்துள்ளனர். இசையமைத்துள்ள நிலையில் ஏலியன் குறித்த பேண்டஸி திரைப்படம் ஆக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
லால் சலாம்:
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்க லைகா ப்ரொடக்ஷன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
கங்குவா:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் திஷா பதானி மற்றும் பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
வேட்டையன்:
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஞானவேல் இயக்கும் நிலையில் ரஜினியின் 170 ஆவது திரைப்படமான இதில் அமிதாப் பச்சன், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகாசிக்கு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
விடுதலை 2:
வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேப்டன் மில்லர்:
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ளது. தனுஷ், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
தளபதி 68:
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்ட இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்..
விடாமுயற்சி:
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் திரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.