புதுச்சேரியில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து பந்த் போராட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக யூனிட்டுக்கு 15 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் மின் கட்டண உயர்வு, ப்ரீபெய்டு திட்டம் மற்றும் மின் துறையை தனியாரிடம் ஒப்படைத்தல் போன்றவைகளுக்கு கண்டனம் விழுந்துள்ளதால் இன்று பந்த் போராட்டம் நடக்கிறது.  போராட்டத்தின் காரணமாக இன்று புதுச்சேரியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று புதுச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம் என்பதால் இன்றைய தினம் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், திரையரங்குகளில் இயங்காது என்றும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.