
இந்தியாவில் நானோ திரவ டி.ஏ.பி உரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த உரத்தை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு உரத்தில் தற்சார்பு நிலையை அடைய இது ஒரு பெரிய நடவடிக்கை என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்நிலையில் நானோ டிஏபி உரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மேலும் இது விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்கான முக்கிய நோக்கம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.