தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது 6244 பணியிடங்களுக்கு இதுவரை 20 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முதல் பகுதி கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாவது பகுதியில் 75 பொது அறிவு கேள்விகளும், 25 திறனறி கேள்விகளும் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத செல்பவர்கள் முன்கூட்டியே ஹால் டிக்கெட் நகலை எடுத்து வைக்க வேண்டும். அடுத்ததாக ஆதார் கார்டு அல்லது ஓட்டர் ஐடி, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கருப்பு நிற பந்து முனை பேனா ஆகியவற்றை எடுத்து வைக்க வேண்டும். குரூப் 4 தேர்வு எழுத செல்பவர்களுக்கு குழந்தை அட்வைஸ் செய்து all the best சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by KANEESH KUMAR G (@kaneeshmaths)