தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பயன்படுகிறது. தற்போது இந்த சான்றிதழை ஆன்லைன் மூலமாக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை குறித்து இங்கே காண்போம். அதாவது தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிலும் குரூப்-1, குரூப் -2, குரூப் -4 என அனைத்து தேர்வுகளிலும் 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தமிழ் மொழி தேர்வில் தேர்வர்கள் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தங்கள் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து இருக்க வேண்டும். மேலும் ஆரம்ப காலத்தில் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தமிழ் வழி சான்றிதழை பெற்று வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் ஆன்லைன் மூலமாக தமிழ் வழி சான்றுகளை பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் வழி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்.

1.முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. அதில் பயணக் குறியீடு மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.

3. அடுத்து வரும் பக்கத்தில் உள்ள service என்பதில் வருவாய்த்துறை என்பதை கிளிக் செய்து PSTM சான்றிதழ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. பிறகு ஓபன் ஆகும் பக்கத்தில் உள்ள முழு விவரங்களை நிரப்பி சப்மிட் கொடுக்க வேண்டும்.

5. கடைசியாக ரூ.60 கட்டணம் செலுத்தி உங்கள் ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.