தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு ஏப்ரல் 28ஆம் தேதி நடத்தப்பட்டு இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூன் இரண்டாம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி ORal test நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கான MEMO வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களின் பதிவு எண்ணை பதிவிட்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.