சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினந்தோறும் பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மெட்ரோ நிறுவனம் பயணிகளுக்கான பயன் அனுபவத்தை மேம்படுத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மொத்த க்யூ ஆர் பயணச்சீட்டு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வு அழைப்பிதழ்களில் மெட்ரோ ரயிலின் அச்சிடப்பட்ட க்யூ ஆர் குறியீடுகள் போடப்பட்ட பயணச்சீட்டை வழங்குகின்றது.

இதன் மூலமாக நிகழ்ச்சிக்கு வருவோர் கட்டணம் இல்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய முடியும். இந்த புதிய வசதி மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்குவது மட்டுமல்லாமல் அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் நிகழ்ச்சிக்கு செல்ல வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் நிறுவனம் முதல்முறையாக ஜிபோ டெக்னாலஜிஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாளர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்விற்கான அழைப்புதல்களில் முன்பதிவு செய்யப்பட்ட ஐந்தாயிரம் qr குறியீடு பயண சீட்டுகளை அச்சிடவுள்ளது.