தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 1000 நபர்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ₹6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிகளில் திறனாய்வகம் அமைக்க ₹200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.