திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக வருகை வந்து சிறப்பிப்பதற்குரிய மாண்புமிகு மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே மாண்புமிகு தமிழக ஆளுநர் R.N ரவி அவர்களே… மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே… நாடாளுமன்ற  – சட்டமன்ற உறுப்பினர்களே….  மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதநிதிகளே….  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே…..

துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களே…..  பேராசிரியர் பெருமக்களே…..  என் அன்பிற்கினிய மாணவர் கண்மணிகளே…..  பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை சார்ந்திருக்க கூடிய நண்பர்களே…..  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் காலை வணக்கம்‌. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று திராவிடக் கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்காக எனது மனமார்ந்த மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கு மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்ற எந்த பட்டியில் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும்.100 ஆண்டுகளுக்கு முன்னாடி நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் கல்விக்காக போடப்பட்ட விதை தான் இன்னைக்கு வளர்ந்து கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கின்றோம் என தெரிவித்தார்.