அதி வேக வளர்ச்சியில் சென்று கொண்டிருந்த Thread  செயலி சரிவை நோக்கி பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீப நாட்களாக உலகப் பணக்காரர்களின் முதல் இடத்தைப் பெற்றுள்ள எலான்மஸ்க்  அவர்களுக்கும், சோசியல் மீடியா என சொல்லப்படும் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்திற்கும் சொந்தக்காரராக விளங்கும் மார்க் ஜுக்கர் பெர்க் ஆகிய இருவருக்கும் இடையில் மோதல் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதன் காரணமாக, ட்விட்டருக்கு போட்டியாக Thread  என்னும் செயலியை மார்க் ஜூக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்திய ஒரு வாரத்தில் 100 மில்லியன் பயனாளர்களை பெற்று அபார சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து “ட்விட்டரின் கொலையாளி” என  Thread  செயலி சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால் அதனுடைய வெற்றி சிறிது காலம் கூட நீடிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்த எழுச்சி நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து தற்போது 75% வரை பயனாளர்களின் செயல்பாடுகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Thread ன் இந்த மோசமான நிலைக்கு காரணம், ட்விட்டர் செயலியானது அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கான ஃப்ரீ ஸ்பீச் தளமாக திகழ்கிறது.

பலரும் தங்களுக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாக பேசியும், பல பிரச்சனைகளுக்கு தங்களது கண்டனங்களை தெரிவிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் instagram ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தனி மனிதன் தனது சுய விளம்பரத்தை தேடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் செயலிகளாகும். இவற்றை போலவே thread செயலியும்  இருப்பதால் அது பயனாளர்களை இழந்து வருவதாக கூறப்படுகிறது.