தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை & வலிமை படங்களுக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் 3-வது முறையாக இணைந்த படம் துணிவு.  இந்த  திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

 இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மற்றும் வெளிநாட்டில்  லைகா நிறுவனம் மூலம் வெளியிடபட்டது. இதனையடுத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் துணிவு படத்தை திரையுலகினர் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் 43 நிமிடங்கள் ஓடி  ட்ரெண்டாகி வருகிறது.