நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரை குளம் பகுதியை சேர்ந்த முனீஸ்(41), மருந்து கொத்தள ரோடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்(27), செம்மரக்கடை சந்தை பகுதியைச் சேர்ந்த சேத்தப்பா(44) ஆகிய மூன்று பேர் மீது நாகை காவல் நிலையங்களில்  கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  உள்ளது. இந்நிலையில் இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சுக்கிரன் ஜவகர் கலெக்டர் அருண் தம்புராஜுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதை அடுத்து குண்டர் சட்டத்தில் மூன்று பேரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் உள்ள முனீஸ், திருச்சி மத்திய சிறையில் உள்ள அலெக்ஸ் மற்றும் சேத்தப்பா ஆகிய மூன்று பேர் மீது குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது.