
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அதில் அவர் பேசியதாவது, அடியார்க்கு அடியாராக இருந்து தொண்டு செய்து கொண்டிருப்பவர் சேகர் பாபு.
அவரால் தான் திமுக அரசு பக்தர்கள் போற்றும் அரசாக மாறியுள்ளது. நான் முதலமைச்சராக பதவி ஏற்ற நாளிலிருந்து அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அறநிலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள்தான்.
மேலும் அறநிலைத்துறை சார்பில் 2300 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன, பல பக்தர்கள் ஆன்மீக தளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதிலும் மிக குறிப்பிடத்தக்கது 3,800க்கும் மேற்பட்ட திருக்கோவிலுக்கு குடமுழுக்கு செய்து சாதனை படைத்தது தான். 31 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே உண்மையான பக்தர்கள் திமுக ஆட்சியினை பாராட்டி வருகின்றனர். பக்தி என்ற பெயரில் பகல்வேஷம் போடுபவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எந்த கேலி, கிண்டல்கள் செய்தாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. மக்கள் பணி செய்து கிடப்பதே எங்கள் கடன் என கூறினார்.