மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 13ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் பாஜக ஆட்சியில் தொழிலாளர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்புக்களும் அரசால் வழங்கப்படுகிறது.

அயோத்தியில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ராமர் கோயிலை கட்டியவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆனால் ஆக்ராவில் தாஜ்மஹாலை கட்டியவர்கள் கைகள் துண்டிக்கப்பட்டன. அதேபோன்று மிகவும் விலையுயர்ந்த துணைகளை நெய்தவர்களின் கைகளும் அக்கால ஆட்சியர்களால் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அந்த வகை பாரம்பரியமிக்க கலாச்சார துணிகள் அழிந்துவிட்டன என தெரிவித்தார். இது அரசியல் தலைவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.