திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் பற்றி அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன் என்பவர் இங்கு வந்துள்ளார். எந்த விதமான ஆதரவும் அவருக்கு இல்லாத நிலையில் பழனியில் இருந்து வலங்கைமானுக்கு வந்து தனது இறுதி காலம் வரை ஆலங்குடி குருபகவான் கோவிலில் தங்கி இருக்க அனுமதி வேண்டும் என  வலங்கைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அழுக்கு சட்டை மற்றும் நீண்ட நாளான தாடியுடன் தோற்றமளித்த  அவரிடம் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரணை மேற்கொண்டுள்ளார். அவரது பரிதாப நிலையை பார்த்த இன்ஸ்பெக்டர் முதியவருக்கு மதிய உணவு வழங்கியதுடன் அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை கொடுத்து பாதுகாப்புடன் பஸ்ஸில் ஆலங்குடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்தகாயேஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் ஆலங்குடி ஊராட்சி நிர்வாகத்திடமும் முதியவர் குறித்து முழு தகவலையும் தெரிவித்துள்ளார். அவரை பாதுகாப்புடன் கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டார். ஆதரவற்ற நிலையில் தஞ்சம் அடைய வந்த முதியவருக்கு மனித நேயத்துடன் உதவிய இன்ஸ்பெக்டர் ராஜாவிற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர் தெரிவித்து வருகின்றனர்.