பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக தனது உடலை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதும் உண்டு.

இது போன்ற சருமத்தை ஆரோக்கியமான முறையில் பளபளப்பாக்க விரும்புவோர் உண்ண வேண்டியவை என்னவென்றால் முதலில் கேரட். கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இது மட்டுமல்லாமல் கேரட்டில் கரோட்டின் நிறைந்துள்ளது. இது புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

அடுத்தபடியாக சர்க்கரை வள்ளி கிழங்கு. இதில் அதிக அளவு பீட்டா கரோட்டின், விட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கிழங்கு சருமத்திற்கு ஊட்டம் அளிப்பது மட்டுமல்லாமல் உள்ளிருந்து பளபளக்க செய்ய வைக்கின்றது.

இந்த வரிசையில் அடுத்தபடியாக இருப்பது சிட்ரஸ் பழங்கள். திராட்சை, எலுமிச்சை. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் ஏராளமானவை குளிர் காலத்தில் தான் கிடைக்கும். இந்த வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்கள் கரும்புள்ளி, முகப்பரு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கின்றது.

அடுத்ததாக மஞ்சள். இதில் பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு கூறுகள் அதிகமாக உள்ளது. சிறிதளவு மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பதால் சருமம் பளிச்சிடும் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இறுதியாக சியா விதை.

இதில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார் சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது மட்டுமின்றி அவை ஒமைக்கா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகின்றது மற்றும் முகப்பரு, தழும்புகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கின்றது.