வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வாரிசு திரைப்படம் ரிலீசானது. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இத்திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றார்கள். வாரிசு திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் படக்குழு உலக அளவில் வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கின்றார். அவர் தெரிவித்துள்ளதாவது, வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலித்தது என்பது உலக மகா உருட்டு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இதனால் விஜய் ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் பங்கம் செய்து வருகின்றார்கள்.