
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 வேலைகளை மட்டும் தான் கரெக்டாக செய்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதாவது நேற்று ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மீனவர்கள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. ஆனால் இதில் எல்லாம் அவர் கவனம் செலுத்துவது கிடையாது. முதல்வர் ஸ்டாலின் இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. அதற்கு பதிலாக கருணாநிதி புகழ் பாடுவது மற்றும் உதயநிதிக்கு பட்டம் சூட்டுதல் போன்ற வேலைகளில் தான் கவனமாக இருக்கிறார் என்று கூறினார்.
அதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். உதயநிதிக்கு முடி சூட்டி பார்ப்பதுதான் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள். மக்கள் பிரச்சினை பற்றி அவருக்கு கவலையே இல்லை. உதயநிதி ஸ்டாலினை உடனடியாக துணை முதல்வர் ஆக்கினால் கண்டிப்பாக பிரச்சினை வரும். இதனால்தான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அமர்த்துவது குறித்து சிறிது சிறிதாக கசிய விட்டு மக்கள் மனதில் பதிய வைக்கிறார். மேலும் உதயநிதி ஸ்டாலினை நிச்சயம் மக்கள் துணை முதல்வராக ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.