உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு இளைஞர் ஸ்கூட்டி (Scooty) ஓட்டிய விசித்திரமான விதம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காரில் பயணித்த ஒரு பெண், சாலையின் நடுவில் அந்த இளைஞர் ஸ்கூட்டியை ஓட்டியதைப் பார்த்து வீடியோ எடுத்துள்ளார்.

அந்த இளைஞர், ஸ்கூட்டியின் சீட்டில் சம்மணம் போட்டது போல் அமர்ந்திருந்ததுடன், ஹேண்டிலையும் பிடிக்காமல் சர்வ சாதாரணமாக ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Aditri_ke_hisab_se (@mere_hisaabh_se)

இதனைக் கண்ட அந்தப் பெண், “லக்னோவில் வினோதமான மனிதர்கள் இருக்கிறார்கள், கையை விட்டு ஆட்டோ ஓட்டுகிறார், கைகளை அசைத்துக்கொண்டு சவாரி செய்கிறார்” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

அந்த இளைஞர் சற்றும் பயமின்றி ஸ்கூட்டியைச் சம்மணம் போட்டது போல் ஓட்டிச் சென்றது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவுக்குப் பலரும் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர், “ஓட்டவில்லை, அதுவாகவே செல்கிறது” என்று கமெண்ட் செய்ய, மற்றொருவர், “இதுதான் லக்னோவின் ஸ்டைல்!” என்று பதிவிட்டுள்ளார்.

“புன்னகை செய்யுங்கள், நீங்கள் லக்னோவில் இருக்கிறீர்கள்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.