
திருமதி கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்திய வாழ்வின் அழகையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இந்தயாவில் கிடைக்கும் பாலை பற்றி கூறிய பதிவு வைரலாகி வருகிறது. “இந்தியாவில் கிடைக்கும் பால் அமெரிக்காவைவிட ருசியாகவும், கிரீமியாகவும் இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்தியப் பாலை விரும்புவதற்கான காரணங்களை விளக்கி, “இந்தியர்கள் தங்கள் உணவுகளில் அதிக கிரீம் சேர்த்து சுவையை மேம்படுத்துகிறார்கள். இதனால் பால் மிகவும் இனிப்பாக இருக்கும்” என்று கூறினார். அமெரிக்காவில் கிடைக்கும் 0% கொழுப்பு, 1%, 2%, மற்றும் முழு பால் (3.5% கொழுப்பு) வகைகளை இந்தியாவின் டபுள் டோன் (1%), டோன்ட் (3%), தரப்படுத்தப்பட்ட (4.5%) மற்றும் முழு கிரீம் (6%) பால் வகைகளுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் மற்றும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. பல இந்தியர்கள் அவரது கருத்துக்களை வரவேற்று, “பாலை அடிப்படையாக கொண்டு இந்தியர்கள் பல வகையான உணவுகளை தயாரிக்கிறார்கள், அதனால்தான் இங்கே சுவை சற்று மாறுபட்டது” என பதிவிட்டுள்ளனர். மேலும், “பனீர், இனிப்புகள் போன்றவற்றிற்கும் பால் மிகவும் முக்கியம்,” எனவும் சிலர் தெரிவித்துள்ளார்.