யோச்சி மற்றும் மிச்சி என்ற இரட்டை சகோதரிகள் ஜப்பான் நாட்டில் வசித்து வருகின்றனர். இருவருக்கும் தற்போது 33 வயதாகிறது. யோச்சி என்றவர் 162.5 சென்டிமீட்டர் உயரமும் மிச்சி என்பவர் 87.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளனர். ஒரே நேரத்தில் பிறந்த இரட்டை சகோதரிகள் முக அமைப்பு மற்றும் உயரத்தில் ஒற்றுமை இல்லாமல் இருப்பது இதுவே முதல் முறை என்பதால் அது இது உயர வித்தியாசத்தில் இருக்கும் இரட்டை சகோதரிகள் என்ற கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளனர்.

இரட்டை சகோதரிகளான இவர்கள் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் பிறந்துள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த உயரத்தில் இருக்கும் மிச்சிக்கு எலும்பு நோய் இருப்பதால் அவரின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. மேலும் மிச்சி அவர்களின் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். தொடர்ந்து இவர் தந்தை நடத்தும் கோவிலில் வேலை செய்து வருகிறார். யோச்சிக்கு திருமணம் ஆகி தாயாக இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் கின்னஸ் சாதனைக்கான வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.