சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு சேவலை தாக்க போன ஒருவர், தலைதெறிக்க ஓடிய காட்சி அனைவரையும் நகைச்சுவையுடன் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு மனிதர் கையில் கட்டையுடன் சேவலை அச்சுறுத்த முயன்ற போது, முதலில் அமைதியாக இருந்த அந்த சேவல் திடீரென வன்முறையாக எதிர்வினை தெரிவித்து, அவரை துரத்த ஆரம்பித்தது.

 

அதிர்ச்சியடைந்த அந்த நபர் வேகமாக ஓடி, மரங்களை தாண்டி தப்பிக்க முயன்ற காட்சிகள், நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. “இந்த சேவலுக்குத் பதக்கம் கொடுக்கணும்!” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், “அளவு முக்கியம் இல்ல, பலம் போதும்” என்பதை இந்த வீடியோ நம்மை மறுபடியும் நினைவூட்டுகிறது.