காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி அண்மையில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி பேட்டி அளித்தபோது, தற்போது வரை திருமணம் ஏன் செய்துக்கொள்ளவில்லை என அவரிடம் நேர்காணல் செய்யும் செய்தியாளர் கேள்வியெழுப்பினார். இதற்கு ராகுல்காந்தி பதில் அளித்ததாவது, இது வினோதமானது எனக்கே தெரியவில்லை.

ஆனால் நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். அதன்பின் பாரத் ஜோடோ யாத்திரையில் தாடியை ஷேவ் செய்யாதது பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, ஜோடோ யாத்திரை முடியும் வரை தாடியை ஷேவ் செய்யப்போவதில்லை முடிவுசெய்தேன். இப்போது தாடியை அப்படியே வைப்பதா (அ) எடுத்து விடுவதா என இனி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.