மராட்டியத்தின் மும்பை நகரில் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய பெண் நள்ளிரவில் தன் 3 குழந்தைகளுடன் உறங்கிகொண்டிந்தார். அவரது கணவர் ஒரு வேலையாக வெளியில் சென்றுள்ளார். இதனிடையே அவரது வீட்டுக்கு கதவு இல்லாததால் மூங்கில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து வைத்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் இரவில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் வாய் மற்றும் தொண்டை பகுதியை அழுத்தி பிடித்துள்ளார்.

இதனால் அப்பெண் சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து அப்பெண் நீதிமன்றத்தில் பலாத்கார வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், குற்றவாளி அப்பெண்ணின் அக்காள் கணவர் என புகாரில் குற்றசாட்டாக கூறப்பட்டுள்ளது. அந்நபரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது, அந்த பெண் சுயநினைவற்று போயுள்ளார், மின்சாரமும் இல்லை. இதன் காரணமாக குற்றவாளியை அவரால் அடையாளம் காண இயலாது என வாதிட்டுள்ளார்.

அதன்பின் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மீரா சவுத்ரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அது குற்றவாளியான அக்காள் கணவருடன் ஒத்துபோயுள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய இவ்வழக்கில், பெண்ணின் அக்காள் கணவரான 38 வயதுடைய நபருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.