தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டினரிடம் இது குறித்து விசாரித்த போது பெண் வீட்டினர் வரதட்சணையாக அளித்த பொருட்களில் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பர்னிச்சர்களையும் கொடுத்திருப்பதாக மாப்பிள்ளையின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் காரணமாகவே திருமணம் நின்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, அவர்கள் கேட்ட பொருட்களை நாங்கள் தரவில்லை எனவும் பழைய பர்னிச்சர்களை கொடுத்திருப்பதாகவும் மாப்பிள்ளை வீட்டினர் கூறியுள்ளனர். மேலும் திருமணத்தை ஏற்பாடு செய்து உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் என அனைவரையும் அழைத்தேன். ஆனால் திருமணத்திற்கு மாப்பிள்ளை வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது மாப்பிள்ளையின்  தந்தை என்னை தகாத முறையில் நடத்தினார் என குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.