இன்றைய சமூக ஊடக உலகத்தில், பலரும் பிரபலமடைவதற்காக வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஒரு பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர் செய்யும் செயலைப் பார்த்த மக்கள், அதிர்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். வீடியோவைப் பார்த்த பிறகு மக்கள், “இது என்ன தவமா?”, “மூணு குலாப் ஜாமுன் ஒரே நேரத்தில் திணிக்கணுமா?” எனக் கேட்டு வருகின்றனர்.

வீடியோவில், அந்தப் பெண் நாற்காலியில் அமர்ந்தபடி தனது முன்னிலையில் உள்ள தட்டில் பெரிய அளவில் உள்ள குலாப் ஜாமுன்களை பார்த்து, மூன்றை ஒன்றாக எடுத்து வாயில் திணிக்க முயற்சிக்கிறார்.

அந்த முறையில், அவரால் விழுங்க முடியாத அளவுக்கு வலுக்கட்டாயமாக வாயில் நிரப்பும் செயல் காணப்படுகிறது. பலரும் இதை வெறும் காணொளி உருவாக்கும் பெயரில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் முயற்சியாகவே விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோ, X தளத்தில் @imnatasha09 என்ற பயனர் கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோ தலைப்பாக, “இணையம் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை ஏராளமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். வீடியோவுக்குப் பின்னர், சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட்களால் அடித்து தூளாக்கி வருகின்றனர்.

ஒருவர் – “குலாப் ஜாமுன் எங்கே சிக்கி கதறுது என்று யோசிக்கிறேன்,” என்றும், மற்றொருவர் – “மன்னிக்கணும் ஓ பெரிய அரக்கன்” என்றும், மூன்றாவது ஒருவர் – “இதைப் பார்த்த உடனே எனக்கே வாந்தி வந்துச்சு” என்றும் தெரிவித்துள்ளனர். இது போன்ற வீடியோக்கள் மூலம் பிரபலமாவது வேண்டுமென்றால், அதற்கும் ஒரு எல்லை இருக்கவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.