பள்ளிகளில் கல்வி கற்பதற்குப் பதிலாக அதிகாரம் காட்டும் மாணவர் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது பெண் ஆசிரியையிடம், “ஹோம் வொர்க் கொடுத்திங்கனா, என் அப்பா போலீஸ்ல இருக்கார்… உங்களை சுட சொல்லிருவேன்” என மிரட்டுகிறார். அதற்கு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், “ஏன் படிப்பில் ஆர்வம் காட்ட மாட்டே?” என்று கேட்டாலும், சிறுவன் எந்த காரணமும் சொல்லாமல் தனது தந்தையின் பதவியை மட்டுமே அடிக்கடி வலியுறுத்துகிறார்.
இந்த வீடியோ பார்வையாளர்களிடம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி மாணவன், அது சிறுவனாக இருந்தாலும்கூட, தனது ஆசிரியருக்கு இவ்வாறு பேச்சு நடத்துவது அசிங்கமானது, துஷ்பிரயோகமானது என பலர் கூறி வருகிறார்கள். மேலும், இந்த சிறுவன் கல்வியில் கவனமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம் கற்பிக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது.
View this post on Instagram
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் வந்துள்ளன. ஒரு நெட்டிசன் “மேடம்… கவனமா இருங்க!” என்று குறிப்பிட்டிருக்க, மற்றொருவர் “இவன் சின்ன வயதில் இப்படின்னா… பெருசா நெடுமாறன் மாதிரி ஆகுவான்!” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக “இது ஒரு கேவலமான சமூதாய சிக்கல்” எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
