தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 25) வாகனத் தணிக்கை நடந்துகொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக வந்த ஒரு கார், அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மது என்பவர் மீது மோதியது.
இதில் அவர் காரின் முன்பக்கத்தில் (Bonnet) விழுந்தும், டிரைவர் காரை நிறுத்தாமல் சுமார் 500 மீட்டர் தூரம் அவரை இழுத்துச் சென்றார். பொதுமக்கள் காரை மடக்கிப் பிடித்ததால் அவர் உயிர் தப்பினார். அந்த கார் ஏற்கனவே மூன்று பைக்குகள் மீது மோதிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
రంగారెడ్డి జిల్లా యాచారంలో డ్రంక్ అండ్ డ్రైవ్ తనిఖీల నుంచి తప్పించుకునే క్రమంలో శ్రీకర్ అనే వ్యక్తి, ఎస్ఐ మధును తన కారు బోనెట్పై సుమారు 500 మీటర్ల దూరం లాక్కెళ్లిన విషయం తెలిసిందే. అదే వేగంతో ఒక బైక్ను ఢీకొట్టడంతో, అందులో ప్రయాణిస్తున్న మహిళ చేయి విరిగింది, చిన్నారికి… pic.twitter.com/iEyhrPwhBM
— ChotaNews App (@ChotaNewsApp) January 26, 2026
இதேபோல் நிஜாமாபாத் பகுதியில், கஞ்சா கடத்தி வந்த காரை நிறுத்த முயன்ற சௌமியா என்ற பெண் கலால் துறை காவலர் மீதும் கஞ்சா கும்பல் காரை ஏற்றியது.
இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கஞ்சா கடத்திய காரில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
