இந்தியாவில் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு 6 வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். அந்த 6 வசதிகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். அதன்படி பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு திடீரென தீ விபத்து ஏற்பட தீயணைக்கும் கருவிகளை ரெடியாக வைத்திருக்க வேண்டும்.

இதனையடுத்து இலவச கழிவறை வசதி, இலவச தொலைபேசி வசதி போன்றவைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஏதாவது அவசரம் என்றால் பெட்ரோல் பங்கில் உள்ள இலவச தொலைபேசி மூலம் பேசிக் கொள்ளலாம். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்ட பிறகு டயர்களுக்கு இலவசமாக காற்று நிரப்பி கொடுக்க வேண்டும். மேலும் அரசு விதிப்படி இந்த 6 வசதிகள் இருந்தால் மட்டும்தான் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் கொடுக்கப்படும். இந்த வசதிகள் இல்லாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அது தொடர்பாக புகார் கொடுக்கலாம்.