சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ஒரு வீடியோவில், தள்ளுவண்டியில் வெள்ளரிக்காய் விற்கும் ஒருவர், அதை பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் காட்டுவதற்காக, வெள்ளரிக்காயை வாயில் வைத்து எச்சில் தடவுவதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காட்சி மிகவும் வித்தியாசமாகவும், அருவருப்பாகவும் உள்ளது.
வீடியோவில் பின்னால் இருந்து ஒருவர், “முன்னால் கடல் இருக்கு ப்ரோ!” என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களிடையே சிரிப்பையும் கோபத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. இப்படி செய்வது மக்களின் உடல்நலத்துடன் விளையாடுவதாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
இந்த வீடியோ வெளியானதும், சமூக வலைதளங்களில் தள்ளுவண்டிக்காரருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “இதனால்தான் வெளியில் வெள்ளரிக்காய் வாங்குவதில்லை,” என்று ஒருவர் கூற, “இனி வெள்ளரிக்காய் பார்த்தாலே பயம் வருது,” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
இது போன்ற செயல்கள் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என்றும், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்துகின்றனர். “கடல் இருக்கும்போது அதில் துவைத்திருக்கலாமே!” என்று சிலர் நகைச்சுவையாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ, வெளியில் வாங்கும் உணவுப் பொருட்களை நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் (@khabar.ig) என்ற பக்கத்தில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, தொடர்ந்து பலரது கருத்துகளைப் பெற்று வருகிறது.
