
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினித் (33). இவர் மலப்புரம் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் காவல்துறையினராக பணியாற்றி வந்துள்ளார். கேரளப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டறியும் தண்டல் போல்ட் பிரிவில் இருந்தார். இந்த நிலையில் வினித் கடந்த 45 நாட்களாக விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளிடம் பலமுறை அனுமதி கேட்டு வந்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்காமல் கண்டிப்பாக நடந்து கொண்டதால் வினித் மிக மன வேதனைக்கு ஆளாகியுள்ளார். இதனை அவர்களது நண்பர்களிடமும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ நாளன்று ஆயுதப் படையில் துப்பாக்கிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த வினீத் திடீரென ஏகே 47 என்ற துப்பாக்கியை தனது தலையை நோக்கி சுட்டு தற்கொலை செய்துள்ளார். பலத்த காயமடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்த காவல்துறையினர் சத்தம் கேட்டு விரைந்து வந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் வினீத்தின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுமுறை கிடைக்காமல் காவல்துறை பணியாளர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது