திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட விளையாட்டு கிராமம் அமைக்கப்பட வேண்டும் என்பது உறுதிமொழி.

அதற்கு  மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் கேட்கப்பட்டிருக்கிறது. அது  உயர்க்கல்வித்துறைக்கு… விளையாட்டுதுறைக்கு மாற்றப்பட வேண்டும். அதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அனுமதி பெறப்பட்டவுடன் அங்கு ஒரு விளையாட்டு கிராமம் அமைப்பதற்கான பூர்வாக பணிகள் தொடங்கும்.

தற்போது இருக்கின்ற சின்ன சின்ன இடங்களில் மாநில அளவிலான போட்டி நடைபெற இருக்கிறது. அதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்த  விளையாட்டுக்குரிய  நிதியிலிருந்து….  மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று குழுவிடம் தெரிவித்தார்கள். அந்த பணியும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று குழு அறிவுறுத்தி இருக்கிறது.

அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் 2500 ஏக்கர் பரப்பளவு இருக்கின்ற தொழில்நுட்ப பூங்கா. குழு சென்று பார்வையிட்டது. அது குறித்து ஏற்கனவே நான் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கி இருக்கிறேன். அதேபோன்று நம்முடைய நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்தினால் 864 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றது.

அந்த இடத்தையும் குழு திடீரென்று ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்து சில சின்ன குறைகளை சுட்டிக்காட்டி,  சரி செய்ய உத்தரவிடப்பட்டு தற்போது EE அவர்கள் அங்கு  சரி செய்யப்பட வேண்டிய கற்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கிறது. குழு ஒரு சுவர் தரமில்லாமல் இருப்பதை கண்டுபிடித்தது. உடனடியாக இடித்து அகற்றப்பட்டிருக்கிறது. புதிய சுவர் கட்டப்படும் என்று தெரிவித்து இருக்கின்றார்கள்