தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது . இந்த திட்டத்தில் மொத்தம் 1.6 பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மூன்று லட்சம் விண்ணப்பங்கள் அரசு பணியாளர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான உரிய காரணம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கும் படி அரசு தெரிவித்துள்ளது .

அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எஸ் எம் எஸ் அனுப்பும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்படுகின்றதா என்பதை சோதனை செய்யப்படும் என்றும் அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் குடும்ப தலைவிகள் தங்களது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்படுகிறதா என்பதை சோதித்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.