தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் 1.6 கோடி பயனாளர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட உள்ள நிலையில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்கப்படாத சூழலில் விண்ணப்பத்தாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது.

அதேசமயம் விண்ணப்பதாரர்கள் அளித்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக கைபேசிக்கு வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இணைய சேவை மையம் மூலமாக கோட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.