
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ள நிலையில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஹார்பரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள அகிலன் திரைப்படத்தில் பல்வேறு குற்ற வேலைகளை செய்யும் ஜெயம் ரவி இறுதியில் எப்படி ஹார்பரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, படம் முழுக்க கண்டெய்னர் மற்றும் லாரி தான் போகுது. படத்தில் ஹீரோ யாரு வில்லன் யாருன்னு தெரியல. ஹீரோயின் எதுக்கு வருதுன்னு கூட தெரியல. இந்த கதை எல்லாம் சொல்லி எப்படி ஓகே பண்ணி இருப்பாங்கன்னு தெரியல. ஜெயம் ரவியை டெரராக காமிக்க ஏதேதோ செஞ்சு வச்சிருக்காங்க. ஆனா நமக்கு அவரைப் பார்த்தால் தூக்கி கொஞ்சனும் போல தான் இருக்கு. இதுல கருத்து சொல்லி இருக்கலாம் என்று படத்தை எடுத்து இருக்காங்க. இவங்க கருத்தைக் கேட்டு தான் நான் கருத்து போயிட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் ப்ளூ சட்டை மாறன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.