
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு யூத அருங்காட்சியத்திற்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது பாலஸ்தீன ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ”அமெரிக்கா வெறுப்பிற்கும், தாக்குதலுக்கும் இடம் கொடுக்காது. மத எதிர்ப்பு பயங்கரவாதம் விரைவில் முடிவுக்கு வரவேண்டும். உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.