
கடந்த சில நாட்களாகவே ஆதார் அட்டையை வைத்து பல மோசடிகள் நடைபெறுகின்றது. இவர்கள் மக்களின் ஆதார் எண்களை திருடி, அதன் மூலம் அவர்களுடைய பொருளாதார விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். இந்த திருடர்கள் ஓடிபி, CVV மற்றும் வங்கி தகவல்கள் போன்றவற்றை நவீன முறைகள் கொண்டு திருட ஆரம்பித்து விட்டனர். அப்படி அதிக மோசடி நடைபெறும் ஒன்று ஆதார் எனேபில்டு பேமென்ட் சிஸ்டம், இதன் மூலம் மோசடிக்காரர்கள் போலியான சிலிக்கான் கைரேகைகளை பயன்படுத்தி பயோமெட்ரிக் சாதனங்கள் மூலம் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் விவரங்களை காப்பி செய்து பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கின்றனர்.
இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பயோமெட்ரிக் விவரங்களையும் மக்கள் லாக் செய்து வைக்கும் படி நிதி நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது. அதோடு மாஸ்க்டு ஆதாரை பயன்படுத்துவது நல்லது என்றும் பரிந்துரைத்தது. மாஸ்க்டு ஆதார் என்றால் உங்களுடைய ஆதார் நம்பரில் உள்ள முதல் 8 இலக்கங்களை மறைத்து வைத்துவிட்டு, கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும். இதன் மூலம் மோசடி குறைகிறது. உங்களுடைய முக்கியமான தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் அடையாள சரிபார்ப்புக்கு மாஸ்க்டு ஆதார் கார்டை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது வங்கி KYC, அரசு மானியங்கள் போன்றவற்றிற்கு முழு ஆதார் நம்பரை வழங்குவது அவசியம், ஆனால் ஹோட்டல் புக்கிங், பயணம், வேலை சம்பந்தப்பட்ட சரிபார்ப்பு போன்றவற்றிக்கு நீங்கள் மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்தலாம்.