ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதற்கு எதிரொலியாக பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதோடு வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு அரசுகளும் தங்களது எல்லை பகுதிகளில் ராணுவப் படைகளை குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமிபுரூஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த பஹல்காம் தாக்குதலை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் மார்க்கோ ரூபாய் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக பேச இருக்கிறார் என்று கூறினார். மேலும் இரு நாட்டு அரசுகளிடமும் அமைதி நிலவ நாங்கள் பேச இருக்கிறோம் என்றும் கூறினார்.