ஐபிஎல் 2025 சீசனில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. இதில் முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் எடுத்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சாய் சுதர்சன் 108, சுப்மன் கில் 93 அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பில்லாமல் 19 ஓவர்களில் சேஸிங் செய்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதில் ஆட்டம் இழக்காமல் விளையாடி 108 ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் ஆட்டநாயகன் என்ற விருதை பெற்றார். அத்துடன் 617 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார். சுப்மன் கில் 601 ரன்கள் எடுத்துள்ளார். சுப்மன் கில். சாய் சதர்சன் ஜோடி இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. இதற்கு எங்களுடைய புரிதல்தான் காரணம் என்று சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது எனக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையே அதிக அளவில் புரிதல் உள்ளது. விக்கட்டுக்கு இடையில் ஓடுவது நாம் பேசும் ஒரு விஷயம். அதையும் தாண்டி நான் ஒரு தவறு செய்தால் அவர் சுட்டிக் காட்டுவார். அதே போல் தான், சப்மன் கில் ஒரு தவறு செய்தால் நான் சுட்டிக் காட்டுவேன். இந்த சேஸிங் அணியின் வெற்றிக்கு உதவியதால் நான் சிறந்ததாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.
