மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓர் இரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.