செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சனாதன தருமத்தை திரிச்சி பேசி, அதன் மூலமாக அரசியல் லாபம் கிடைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் நினைத்தால்,  அது நடக்காது என்பதை புரிஞ்சிகிட்டு தான்… முதல்ல முதலமைச்சர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை விட்டாங்க. திமுகவில் யாரும்  சனாதன தருமத்தை பத்தி பேசாதீங்க. இன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் சொல்லுறாங்க…  2024 பின்பு பேசுவோம் அப்படினு….  இது  எல்லாம் வன்மையாக கண்டிக்க தக்கது.

பிரச்சனை ஆரம்பிச்சது நீங்க….   திராவிட கழக மாநாடு நடக்கும் போது 2024க்கு தேர்தல் நடக்கலையா? 2024 தேர்தல் முடிச்சி அத நடத்தி இருக்கலாமே… 2024 தேர்தலுக்கு பின்பு நடத்தி இருக்கலாமே…  இதற்கு முன்னாடி திமுகல சொல்லுவாங்க…  திக வேறு,  நாங்க வேறு…  கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் கூட, அவுங்க கருத்துக்களை ஏத்துக்க மாட்டோம் என்று…. இன்னைக்கு முதலமைச்சர் சொல்லுறாங்க திராவிட கழகம் எனக்கு தாய் கழகத்தை போன்றது.

அப்போது  எதுக்கா வேரறுப்போம்ன்னு மாநாடு வைக்கிறீங்க? இப்போ சுப்ரிம் கோர்ட் நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு கொண்டு வந்துருக்கீங்க. தமிழ்நாட்டுல பேச வேண்டிய விஷயங்கள் 1000 விஷயங்கள் இருக்கு,  அத பேசுவோம். ஜாதிகளை ஒழிக்கணுமா….   ஜாதிகளுடைய ஏற்ற தாழ்வுகளை ஒழிக்கணுமா ரெடி ..ஒரு conference போடுங்க பேசுவோம். அதுக்கு சனாதன தருமம் என்ற வார்த்தை ஏன் வைக்கிறீங்க? அதனால் தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தெரியும். அதனால் அவர் இப்போ இருந்து எஸ்கேப் ஆகலாம்னு எஸ்கேப் ஆகுறாரு.. வேற எதுமே இல்ல என தெரிவித்தார்.