செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வைரமுத்து என்ன சொல்லிருக்கார் ? தனக்கு திருக்குறளும் தெரியாதுங்குறத அப்பட்டமா எடுத்து காட்டி இருக்கார். வள்ளுவர் சொன்னதுதானே… உதயநிதி சொல்லி இருக்கார்ன்னு…. வள்ளுவர் என்ன சொன்னார்? பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் .. அதே தான் கண்ணன் சொல்லிருக்கான் கீதையில….. கண்ணன் கீதையில சொன்னதை தான் வள்ளுவர் திருக்குறள்ல சொல்லிருக்காரு..

அதுல என்ன சொல்லி இருக்கார்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் – அதில் தொழில்  ஒன்னு இல்ல. அதுதான் கண்ணன் சொல்றாரு…  நான் நான்கு வர்ணங்களை அமைத்து இருக்கிறேன். எதன் அடிப்படையில் ? குணா குவாலிபிகேஷன், கர்மா ஜாப். எங்கேயாவது பர்த்ன்னு  சொல்லி இருக்காரா ? இல்ல. உங்களுக்கு நான் பல உதாரணங்களை சொல்றேன்…

விசுவாமித்திரர் சத்திரியரா பிறந்தார். ஆனால் தபஸின் மூலமா பிராமணரானார். அதே மாதிரியா வேதத்தை தந்த வேத வியாசர் மச்சகந்தி என்கின்ற செண்பக தாய்க்கு மகனாக பிறந்தவர். அவர் எப்படி  ரிஷி ஆனார்? ஆகவே அந்த காலத்துல வர்ணங்கள் மாறுவதும்…  வர்ணங்களிலே பேதங்கள்  இல்லாமல் இருந்ததும் நம்மால்  பார்க்க முடியுது.

இப்ப இருக்கிற ஜாதி….  இந்த அடிப்படைகள் எல்லாம் அன்னைக்கு ஒன்னும் இருந்ததில்லை. அன்னைக்கு சொன்னது எவ்வளவு நாலு வர்ணம்? நீ இப்போ 4800 ஜாதி வச்சிருக்க. இதுக்கு யாரு பிராமணரா பொறுப்பு ? இல்ல இந்து மதம் பொறுப்பா? சனாதன தர்மம் பொறுப்பா ?  மூளை வேண்டாம் என தெரிவித்தார்.