அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா மாவட்டத்தில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் மொத்தம் 4 இளைஞர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் தனது நண்பரின் பர்த்டே பார்ட்டிக்காக சென்று விட்டு வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த 4 இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.