
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் வர்தன பேட்டையை சேர்ந்தவர் ரமணா (25). இந்நிலையில் சமீபத்தில் நடந்த டிராக்டர் விபத்து ஒன்றில் ரமணா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மே 3ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரமணா மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து ரமணாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
చనిపోతూ ఆరుగురి ప్రాణాలు కాపాడిన వరంగల్ యువకుడు
వరంగల్ జిల్లా వర్ధన్నపేటకు చెందిన రమణ(25) ట్రాక్టర్ ప్రమాదంలో గాయపడి బ్రెయిన్ డెడ్కు గురయ్యాడు
దీంతో రమణ అవయవదానానికి కుటుంబసభ్యులు ముందుకొచ్చారు
రమణ కళ్లు, కిడ్నీలు, గుండెను సేకరించి ఆరుగురి ప్రాణాలు నిలబెట్టినట్లు జీవన్ దాన్… pic.twitter.com/kPGXlKzFeq
— Telugu Scribe (@TeluguScribe) May 3, 2025
அதன்படி ரமணாவின் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் மூலம் 6 பேர் உயிர் காப்பாற்றப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்த ரமணாவின் குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.