செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையிலே அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் இருக்கு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்கின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அரசு உள்ளாட்சி நிர்வாகத்தையும் அவர்களுடைய பணிகளை தீவிரப்படுத்தி,  காய்ச்சலினுடைய வேகத்தை….  காய்ச்சலை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் என்று பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியிலே உரையாற்றுகிறார். கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு சிறந்த மனிதர்களைப் பற்றி எல்லாம் இதற்கு முன்பெல்லாம் நிறைய நேரத்தில் பாராட்டி இருக்கிறார்.  இன்னும் கூட மங்கி பாத் நிகழ்ச்சியில் நம்முடைய மாவட்டத்தைச் சார்ந்த ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் தான் ஈட்டுகின்ற வேலைக்கு செல்கின்ற பணத்தை குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு,

அவருடைய ஓய்வு நேரத்தில் மக்களுடைய சேவைகளை செய்கின்றது பற்றி எல்லாம் சிறப்பாக பாராட்டி இருக்கிறார். இம்மாதிரி நம் பகுதியில்….  நம்முடைய பக்கத்து தெருவில் இருக்கின்ற நபர்களைப் பற்றி எல்லாம் கூட… மக்கள் அந்தந்த பகுதி மக்கள் அறிவதற்கு முன்பாகவே பிரதமர் தேடி தேடி அவர்களை பாராட்டுவது…. நல்ல காரியங்களை செய்வது….. நல்ல மனிதர்களை ஊக்குவிப்பது….. ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது.

எதையும் எதிர்பாராமல் மக்களுக்காக உழைத்தாலும் கூட…  அவர்களுடைய பணியின் காரணமாக அவர்கள் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களுடைய பாராட்டை,  அங்கீகாரத்தை பெறுவது என்பது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய விருது போன்றது. அம்மாதிரி கோவையை சார்ந்த பல்வேறு நபர்கள் பிரதமருடைய உரையிலேயே இடம்பெறுவது எங்களுக்கு  அதிகமான சந்தோஷத்தை தருகிறது..

மக்களுடைய பணிகளிலே கலை, கலாச்சாரம், சுற்றுச்சூழலில் என்று பல்வேறு துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் கூட…. பிரதமருடைய வாயினால் அவர்களைப் பற்றி பாராட்டி கிடைக்கின்ற பொழுது ஒரு மிகப்பெரிய உத்வேகம் அவர்களுக்கு கிடைக்கிறது என தெரிவித்தார்.