தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 45 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பிரவீன்(32), ராஜ்கபூர்(25) ஆகிய 2 பேரும், அந்தப் பெண்ணிடம் தாங்கள் லிப்ட் கொடுப்பதாக கூறினார். அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் 2 பேரும் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து, கடத்திச் சென்று வயல் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த பெண்ணின் மகன் நேரமாகியும் தனது தாய் வரவில்லை என்பதால் தேடியுள்ளார். இதையடுத்து தனது தாய்க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அந்தப் பெண் நடந்த விஷயங்களை கூறினார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது மகன் வந்து மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.