உலகப் புகழ்பெற்ற கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் நடிகர் ஜாக்லீசன் உக்ரைன் ராணுவத்திற்காக நிதியுதவி திரட்டியுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக உக்ரைன் – ரஸ்யா இடையிலான போர் நடந்து வருகிறது. இதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் உதவியோடு உக்ரைன் வலுவுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜாக்லீசன் உக்ரைன் ராணுவத்திற்கு நிதியுதவி திரட்டி உள்ளார். இதற்காக லண்டனில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட அவர் நடிகர்களுடன் இணைந்து இணைய வாயிலாக நிதி உதவி திரட்டினார்.